பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை நேற்றுமுன்தினம் நள்ளிரவு(03) முதல் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.