நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 04 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறியே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதன் போது அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.