இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை மாதம் 7ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
களனி பகுதியைச் சேர்ந்த மூவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சுதந்திர தின நிகழ்வின் போது தமிழில் தேசிய கீதம் பாட அமைச்சரவை எடுத்த முடிவு, அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடு எனவும் குறித்த மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த இந்நடவடிக்கை மூலம் அமைச்சரவை அரசியலமைப்பை மீறியுள்ளதாக, தீர்ப்பளிக்குமாறும் உயர்நீதிமன்றத்திடம் மனுதாரரால் கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.