தமிழ்நாடு அரசினால், 49 இலங்கையர்களுக்கு மீண்டும் இலங்கை வர அனுமதி…

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு தப்பிச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 49 இலங்கையர்களுக்கும் எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இலங்கைக்கு வருகை தர தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திற்கு மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக , தமிழ்நாடு அரசு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.