தமிழ்நாடு மாநில காவல்துறை இலங்கைக்கு நிதி உதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தமிழ்நாடு மாநில காவல்துறை இலங்கை மக்களுக்காக ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்திய பாதுகாப்பு சேவைகள் சங்கமும் ஆறு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் இந் நிதி உதவி தொகையை கையளித்திருந்தார்.