தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து திட்டம்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் திட்டம் ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கத்தரப்பு இன்று(26) கூடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க அடிப்படையில் இந்த விடுதலை அமைய வேண்டும் என்ற நோக்கிலேயே அரசாங்கம் செயற்படவுள்ளதாகவும் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.