எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு எதுவும் ஏற்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சியில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையினை 275.00 ரூபாவினால் அதிகரிக்க ‘லிட்ரோ’ மற்றும் ‘லாப்’ சமையல் எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, தமிழ் -சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக எவ்வித விலை அதிகரிப்புகளும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
-Rishma