தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கவனயீர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வேதனம்  வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி நாளை தலவாக்கலையில் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலி 620 ரூபாவிலிருந்து 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன்செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே நாளை தலவாக்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.