தமிழ், ஹிந்தியில் 2.0 படைத்த பெரும் சாதனை…

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் `2.0′ படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், ஒரு நாளில் படத்தின் டீசர் தமிழ் மற்றும் இந்தியில் பெரும் சாதனை படைத்துள்ளது.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியான நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியது.

2.0 தமிழ் டீசரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் வேகமாக ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் டீசர் என்ற பெருமையை 2.0 படைத்துள்ளது.
மேலும் படத்தின் டீசரை சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

ஹிந்தியில் 2.0 டீசரை 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 4.5 லட்சம் பேர் டீசரை லைக் செய்துள்ளனர். தெலுங்கில் இந்த டீசரை இதுவரை சுமார் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை 2.0 டீசரை 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், ஹிந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா என மாபெரும் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.