அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தம் வசம் வைத்திருந்ததாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும், உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கின், சாட்சியாளர்களை நீதிமன்றுக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி, சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் இன்று(11) உத்தரவிட்டுள்ளார்.