தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட  உள்ளது.

குறித்த தேரர் மீது  அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்மையில் கைது செய்யப்பட்ட உடுவே தேரர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக பொதுச் சொத்து துஸ்பிரயோகம் தொடர்பிலான சட்டத்தின் கீழ் குறித்த  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும்,  பொது சொத்து ஒன்றான யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்தார் எனவும் இது பொதுச்சொத்து துஸ்பிரயோகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.