நாடாளுமன்றச் செயலாளர் தம்மிக்க சேனாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேணை அடிப்படையற்றது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்றச் செயலாளருக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த குற்றப் பிரேரணையை ஆராய்ந்த நாடாளுமன்ற விவகாரம் குறித்த குழு, பிரேரணை அடிப்படையற்றது என தெரிவித்துள்ளது.
எனவே, இந்த குற்றப் பிரேரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் 55 மில்லியன் குறைநிரப்புப் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றச் செயலாளர் ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.