தயா மாஸ்டரைத் தாக்கியதாக கூறப்படும் நபரை மனநல மருத்துவரிடம் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரைத் தாக்கியதாக கூறப்படும் நபரை மனநல மருத்துவரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் தயா மாஸ்டர் பணியாற்றும் தனியார் ஊடகம் ஒன்றுக்குள் நுழைந்த வயோதிபர் அவரை தாக்கியதாக பொலிஸில் முறையிடப்பட்டது. இதற்கமைய, குறித்த வயோதிபர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேளை, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

#reeshma