தரக்குறைவான மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்களை விற்கும் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு..

தரக்குறைவான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்கும் விற்பனை இடங்களை சோதிக்க வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்திருந்தார்.

அதன்படி குறித்த சுற்றிவளைப்புகளை முன்னெடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் மாதம் முதல் குறித்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma