நவம்பர் 23ம் திகதி முதல் டிசம்பர் 02ம் திகதி வரையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் இடம்பெறவுள்ள T-10 லீக் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க உள்வாங்கப்பட்டுள்ளார்.
அதன்படி அவர் கரச்சி கிங்க்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், லசித் மாலிங்க, குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக ஆகிய வீரர்களும் விளையாடவுள்ளனர்.