(FASTNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில், 3 இலட்சத்து 39,369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.