அடுத்த வருடம் முதல் தரம் 01 வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 39 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான சுற்றுநிரூபம் மே மாதம் முடிவடைய முன்னர் வெளியிடவுள்ளதாவும் அமைச்சு வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, வேறு பல மாற்றங்களையும் கடந்த வருட சுற்றுநிரூபத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.