தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை..

(FASTNEWS|COLOMBO) – தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளல் தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் ஆகியவை தவிர்ந்த மேலதிக பணம் அல்லது வேறு நன்கொடைகளை பெற்றுக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, 08/2019 எனும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இன்று(09) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் போது முறையற்ற விதத்தில் பணம் கோரல் உள்ளிட்டவையும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.