தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்று நிரூபத்தில் மாற்றம்…

தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தகவல்களை தொடர்ந்தும் ஒழுக்க விதிமுறையுடன் பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சில் சமீபத்தில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை குறித்தும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்று நிரூபத்தில் சில மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.