தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் நேற்று(04) வெளியாகியுள்ள நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை அதிபரின் ஊடாக நவம்பர் 4ஆம் திகதி முன்னர் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் 2016 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்பொழுது இப்பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk எனும் முகவரியில் பரீட்சார்த்தியின் சுட்டிலக்கத்தை வழங்குவதன் மூலம் பெறுபேற்றை அறிந்துகொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது