(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் நாளை(12) தொடக்கம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.