தற்கொலைதாரி இன்சாபின் காணியொன்று மாத்தளை பிரதேச சபைக்கு…

(FASTGOSSIP | COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான இன்சாப் அஹமட் என்பவனின் காணியொன்றை மாத்தளைப் பிரதேச சபைக்கு எடுத்துக் கொள்ளும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த காணி மாத்தளை பிரதேச குப்பை சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக இந்த பிரேரணையை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர் நாலக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாதிக்குரியதாக காணப்பட்ட 21 ஏக்கர் காணியே இவ்வாறு பிரதேச சபைக்கு பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.