தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 புகையிரத சேவைகளும் நாளை(11) முதல் இடைநிறுத்தப்படும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன் தினம் (08) தொடக்கம் ரயில்வே சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.