(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தலங்கம-ஹோகந்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடம் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று(14) இரவு மிரிஹான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் 28 மற்றும் 31 வயதுடைய ஹோகந்தர பகுதியில் வசித்து வருபவர்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
கடந்த 11ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் வைத்து 59 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.