தலதா மாளிகையின் ரந்தொலி பெரஹெர இன்று ஆரம்பம்…

வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் ரந்தொலி பெரஹெர இன்று(21) ஆரம்பமாகவுள்ளது.

ரந்தொலி பெரஹெரவை முன்னிட்டு மாலை 7 மணி முதல் மாளிகையின் சுற்று வட்ட வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(21) ஆரம்பமாகவுள்ள பெரஹெர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை முன்னிட்டு இன்று(21) மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சாரதிகளை மாற்று வழியினை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.