கொலை செய்யப்பட்ட தலபூட்டுவா யானையின் தந்தங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கரிமுத்துக்கள் இரண்டை தன்னகத்தே வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் இருவரினதும் பிணை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த இருவரையும எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹவ மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை குறித்த தினத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.