தலபூட்டுவா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 08ஆவது சந்தேக நபருக்கு பிணை..

தலபூட்டுவா யானை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 08ஆவது சந்தேக நபர் இன்று (09) மஹாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஏனைய 07 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலபூட்டுவா என்ற யானையை சுட்டு கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் எச்.எம்.ரன்பண்டா என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டு்ள்ளார்.

இவர் மஹாவ நீதவான் நீதிமன்றில் இன்று(09) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும், 1500 ருபா ரொக்கப் பிணையிலும் விடுவித்து மஹாவ மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதவானுமான ரசிக மல்லவாராச்சி உத்தரவிட்டார்.

அத்துடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#-reeshma