தலவாக்கலையில் இடம்பெற்ற லொறி விபத்தில் 11 பேர் படுகாயம்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் அதில் பயணஞ் செய்த 11 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

லொறியில் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் அனைவரும் ஆண்கள் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.