நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபை முன்பாக நேற்றுக். காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அரசியல் சுயலாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேல்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் உடனடியாக உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்கவில்லை.
ஆகவே, இன்று நாம் தலைகீழாக பிரதேச சபையின் முன்னால் நின்று போராட்டத்தினூடாக தெரிவிக்கின்றோம் என இதன் போது தெரிவித்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோரும் ஈடுபட்டனர்