தலைமைப் பதவியிலிருந்து அலஷ்டயர் குக் விலகுவதாக அறிவிப்பு..?

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை அடுத்து இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியில் இருந்து அலஷ்டயர் குக் விலகுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை முதல் ஆரம்பமாகிறது.

நாளைய போட்டியுடன் இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையை குக் படைக்கவுள்ளார்.

தற்போது இந்த சாதனை மைக்கல் அத்தர்டனிடம் உள்ளது.

இந்த தொடரை அடுத்து அவர் பதவி விலகுவார் என்ற அடிப்படையில் குக் கருத்து வெளியிட்டுள்ளார்.