நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியினை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தற்போது தாம் தலைமைப் பதவியினை ஏற்கும் எதிர்பார்ப்பில் இல்லை என்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றால் அது தமது எதிர்கால அரசியலுக்கு நற்செய்தி அல்ல என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.