“தலைமை வழங்காதவிடத்து மறுதினமே ஓய்வு பெறுவேன்”

(FASTNEWS|COLOMBO)- 2019 உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணியின் தலைமை தனக்கு வழங்காதவிடத்து மறுநாளே தான் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் அதிகாரிகளிடம் சிரேஷ்ட வீரர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மாலிங்க மற்றும் திமுத் கருணாரத்ன இடையே உலகக் கிண்ண அணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் தேர்வுக் குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகபூர்வ குழாம் அறிவிப்பு எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னர் பெயரிடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.