இத்தாலிய சத்திரசிகிச்சை நிபுணரான செர்கியோ கனவெரோ சீன ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள குரங்கொன்றில் தலை மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக உரிமை கோரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
கடந்த வருடம் இவர்கள் மனித தலைமாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளப் போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அறுவைச் சிகிச்சையானது உடல் செயலிழந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பணியில் சீனா மற்றும் தென் கொரிய ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சீன ஆய்வாளர்கள் உயிருள்ள குரங்கொன்றில் தலைமாற்று சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் அதனால் மனிதர்களில் அந்த சிகிச்சையை மேற்கொள்ளும் காலம் அதிக தூரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவிக்கின்ன்றனர்
சீன ஆய்வாளர்கள் குரங்கின் துண்டிக்கப்பட்ட தலையிலுள்ள குருதிக் கலங்களையும் தானமாகப் பெற்ற குரங்கின் உடலிலுள்ள குருதிக்கலங்களையும் வெற்றிகரமாக இணைத்திருந்தனர்
எனினும் முள்ளந்தண்டிலான இணைப்பு சரியாக மேற்கொள்ளப்படாததால் அந்தக் குரங்கு தலை மாற்று அறுவைச்சிகிச்சையையடுத்து சுமார் 20 மணித்தியாலங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்துள்ளது.
எதிர் காலத்தில் தலை மாற்றும் சிகிச்சையை வெற்றியளிகும் என நம்ப இடமுன்ன்டு