பெரும்பாலும் நம் முடியின் நுனிகளில் ஏற்படும் பிளவுகளை அந்த பகுதியை வெட்டுவதன் மூலம் சரி செய்கிறோம். இந்த முறை உங்களுக்கு அழகான பிளவுகள் இல்லாத கூந்தலை கொடுத்தாலும் ஒரு நிரந்தர தீர்வை நமக்கு கொடுப்பதில்லை. வெப்பமான ட்ரையர் பயன்படுத்துவது, ப்ரஷ் செய்வது, கலரிங் செய்வது மற்றும் பிற காரணத்தால் இந்த பிளவுகள் ஏற்படுகின்றன. நீங்கள் என்ன தான் பிளவுகள் உள்ள முடிப்பகுதியை நீக்கினாலும் அதை முழுவதுமாக நீக்க முடியாது.
தேங்காய் எண்ணெய் சிகச்சை:
முதலில் ஷாம்பு போட்டு அலசி, டவலால் உலர்த்திய பின் கூந்தலில் இதை செய்ய வேண்டும். ஒரு கையளவில் கால் பங்கு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதியிலிருந்து நுனி வரை நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கூந்தலை ஒரு துண்டை கொண்டோ அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டோ தூக்கி கட்டி நன்றாக மூடி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் பிறகு ஷாம்பு போட்டு நன்கு தலையை அலச வேண்டும். (முழுமையாக தேங்காய் எண்ணெயை நீக்க வேண்டாம்). இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அவகேடா புரோட்டீன் மாஸ்க்:
அவகேடா பழத்தை நன்றாக நசுக்கி ஒரு முட்டையுடன் கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை சேர்த்து கண்டிஷனர் பதத்திற்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை கூந்தலின் நுனிகள் வரை தடவி 10-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
தேன் மற்றும் ஆலிவ் ஆயில்:
3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் இவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஷாம்பு போட்ட முடியில் அப்ளே செய்து 20-30 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு மறுபடியும் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் முடிகளில் ஏற்படும் பிளவுகள் காணாமல் போய் விடும்.