தல அஜித் போன்று ஹன்சிகா!

ஹன்சிகா வரவர லேடி அஜீத் போலாகிவிட்டார். அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு அழைத்தால் முன்பெல்லாம் தவறாமல் வருவார்.

தற்போது அவருடைய ரேன்ஜ் உயர்ந்துவிட்டதால், இப்போதெல்லாம் எந்தப் படத்தின் புரமோஷனுக்கும் அவர் வருவதே இல்லை. ஜெயம்ரவி உடன் நடித்த ரோமியோ ஜூலியட் படத்தின் ரிலீஸுக்கு முதல்நாள்தான் புரமோஷனுக்கு நேரம் ஒதுக்கினார் ஹன்சிகா.

அந்தப் படத்துக்காவது ஒருநாளாவது நேரம் ஒதுக்கினார். சிம்பு உடன் நடித்து வாலு படத்தின் புரமோஷனுக்கு கடைசிவரை வர மறுத்துவிட்டார் ஹன்சிகா.

ஹன்சிகா புரமோஷனுக்கு வராததினால் வாலு படத்தின் தயாரிப்பாளர் ஹன்சிகா மீது செம கடுப்பில் இருந்தார். சிம்புவின் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தருவதுபோல், வாலு படம் வெற்றியடைய வேண்டும் என்கிற ரீதியில் அப்படத்தின் இயக்குநர் மற்றும் சிம்பு ஆகியோரை வாழ்த்தி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் வாலு படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டதால், ஹன்சிகாவின் ஒத்துழைப்பு கிடைக்காததினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, சிம்பு, சந்தானம் இருவர் மட்டும் வாலு புரமோஷன்களுக்காக பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.