அஜீத், விஜய் சினிமாவில் பரஸ்பரம் சவால்விடுவதை நிறுத்தி சமாதானமான பிறகும் அவர்களின் ரசிகர்களின் ரசிக வெறி குறையவில்லை. விஜய்க்கு பிறந்தநாள், அவரது ரசிகர்கள் கொண்டாடிவிட்டு போகிறார்கள். இதில் அஜீத் ரசிகர்களுக்கு எங்கு வலிக்கிறது?
விஜய்யின் பிறந்தநாள் பிளக்ஸுக்கு அருகிலேயே, தலயின் ராஜ்ஜியத்தில் தளபதி எல்லாம் சும்மா என்று போட்டி பிளக்ஸ் வைத்திருக்கிறார்கள். இணையத்தை திறந்தால் இவர்களின் வெறுப்பு கழிவுகள்தான் எங்கும்.
நடிகர் விவேக், “அஜீத், விஜய் இருவருமே நண்பர்கள். ஆனால் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது வருந்தத்தக்கது. வாழ்த்துவோம் வளருவோம்” என்று இந்த சண்டையைப் பார்த்து அறிவுரை வழங்கியிருக்கிறார். வம்புக்கு பெயர்போன சிம்புவையே இவர்களின் சண்டை வருத்தப்பட வைத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விஜய் அல்லது அஜீத் அவர்களின் உண்மையான ரசிகன் இத்தகைய காரியங்களை செய்ய மாட்டான். இதுபோன்ற நடவடிக்கைகள் உங்களது அபிமான நடிகர்களுக்கே பாதகமாக முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். தல அஜீத்தின் ரசிகனாகிய நான், உங்களிடம், அஜீத் ரசிகர்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு நபரை உயர்த்துவதற்காக இன்னொருவரை மட்டம் தட்டுவதை அஜீத், விஜய் ரசிகர்கள் நிறுத்திக் கொள்வதே நாகரிக சமூகத்துக்கு உகந்தது.