தவறாக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் – மன்னிப்பு கோரினார் மார்க்…

பேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி மார்க் சக்கர்பர்க், “நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதவில் பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.