பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று(03) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் பிரபலங்கள் சிலருடன் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமசிங்க, பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“.. எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் பதவியினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கத் தான் தயார் எனவும், தனது நிலைப்பாடு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிழையான நிலைப்பாட்டினை தவிர்க்குமாறும், தான் ஒருபோதும் திருடர்களுடன் கைகோர்க்க மாட்டேன்..” எனவும் தெரிவித்திருந்ததாக நம்பகமான தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.