தாங்கள் என்றும் நண்பர்கள் தான் என்று நிருபித்த தல தளபதி ரசிகர்கள்!

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களும், மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் சென்னையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் வெள்ளதால் பாதிக்கபட்ட மக்கள் தங்குவதற்காக திறந்து வீட்டு உள்ளார். மேலும் 5 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மக்களின் அர்த்தியாவசிய பொருட்களையும் மக்களுக்கு வழங்கியுள்ளார்.

தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவையும் அவரே அளித்துள்ளதாகவும், மேலும் நிவாரண உதவிக்கு 60 லட்சம் அளித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து தற்போது மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதை கண்ட மக்கள் நெகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.