தாஜுடீனுடன் றகர் விளையாடிய மற்றுமோர் வீரர் திடீரென மரணம்

இலங்கையின் பிரபல மற்றுமோர் றகர் வீரரும் கண்டி றகர் அணியின் உறுப்பினருமான சஜித் மல்லிகாரச்சி திடீரென மரணமடைந்துள்ளார்.

மரணமடைகையில் அவருக்கு 37 வயதே ஆகின்றது. மரணத்திற்கான காரணம் மாரடைப்பே என தெரியவருகின்றது.

1997 ஆண்டு கொழும்பு இசிபதன வித்தியாலயத்தின் றகர் அணிக்கான தலைவரான சஜித், கொலை செய்யப்பட்ட பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனுக்கு ஏற்படும் உபாதைகளின் போது விளையாட அழைத்துச்செல்லப்படுபவராகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சஜித்தின் பிறப்பிடம் கண்டி நித்தவெல என்பதும் குறிப்பிடத்தக்கது.