றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் சடலத்தின் சில பாகங்களை மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவர் மற்றும் அந்த கல்லூரியின் உபவேந்தர் எடுத்து சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிய “மருத்துவ பீட மாணவர்கள் நடவடிக்கை குழு” இன்று(26) குற்றப் புலனாய்வு துறையிடம் முறைப்பாடு செய்தது.
கொழும்பு முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, தனக்கு கீழ் சேவை புரியும் பணியாளரை பயன்படுத்தி வஸீம் தாஜூதீன் சடலத்தின் பாகங்களை மாலபே – சைட்டம் நிறுவனத்திற்கு கொண்டு சென்றதாக அண்மையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து தெரியவந்தது.
இது தொடர்பாக பலரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பெற்று கொடுத்த வாக்குமூலங்களுக்கு அமைவாக இந்த சம்பவம் தெரியவந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.