குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரியை சிறைச்சாலைக்குள் கொலை செய்ய தீட்டிய திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, வர்த்தகர் மொஹமட் சியாம் ஆகியோரின் கொலை உட்பட கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை இவ்வாறு கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் சந்தேகத்தின் பேரில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குழுவொன்றினால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குற்றப் புலனாய்வுத் துறையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த பொலிஸ் அதிகாரியின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.