முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் திரொஸ்கி இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.
றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் திகதியன்று அவரது வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக நீதிமன்றில் இன்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.