தாஜுதீன் கொலையுடன் தொடர்பான திஸ்ஸவை எனக்குத் தெரியாது – நாமல்

தாஜூதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடி தொடர்பு கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் திஸ்ஸ என்பவரை தமக்கு தெரியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாஜூதீன் மரணத்துடன் இணைத்து பேசப்படும் மஹிந்தவின் மகன் யோசித்தவுடன் திஸ்ஸ சந்தோசமாக கலந்துரையாடும் புகைப்படம் ஒன்றை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.

திஸ்ஸ என்பவர் தாஜூதீன் கொலை மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவின் மீது தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இன்னும், இராணுவத்தில் இருந்து தப்பி வந்த திஸ்ஸ பின்னர் மஹிந்தவின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலும் இணைக்கப்பட்டார்.

மஹிந்தவின் குடும்ப பாதுகாப்பினை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்ட அவர் அந்த குடும்பத்துக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

thissa