றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலையின் தகவல்களை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சுமார் ஒரு வருட காலம் சிறை வைக்கப்படிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை இன்று(02) பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அவரை, 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மணிலால் வைத்தியதிலக,அனுமதித்தார்..
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தார்.
தாஜுதீன் படுகொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.