தாஜுதீன் கொலை – இளங்ககோனும் பதில் கூறியாக வேண்டும் – ரத்னப்ரிய

இலங்கை றக்பி வீரர் வஸீம் தாஜூதின் கொலை தொடர்பில் முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்ககோனும் பொறுப்பு கூற வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்ரியவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.