தாஜுதீன் கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

(FASTNEWS | COLOMBO) – வசீம் தாஜூதீன், லசந்த விக்கிரமதுங்க மற்றும் 4 பேர் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து நாளைய(23) தினத்திற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் குறித்த 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.