தேசிய ரகர் வீரர் வசீம் தாஜுதீன் 17 மே 2012 ஒரு கார் விபத்தின் பின் மரணமானதாக அறிவிக்கப்பட்டு அவ்வழக்கு மூடப்பட்டது. அன்றைய சக்திவாய்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் அவரின் மரணத்திற்குப்பின் ஒளிந்திருப்தாக செய்தி வெளியானது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் அச்செய்தி முடக்கப்பட்டுவிட்டது. அரசு மாற்றதின் பின்னர் இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு இரகசிய பொலிசாரினால் விசாரணை மேட்கொள்ளப்பட்டது. விசாரனையில் அவர் கடும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெளிவாகியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று எடுக்கப்பட்ட போது தாஜுதீன் மரணமடைவதற்கு முன்னர் அவரின் காரை பின் தொடர்ந்த வாகனத்திலிருந்த கொலையாளிகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களை தேடுவதாகவும் இரகசிய பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் அவர்களின் பிம்பங்களை(images) அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அடையாளத்தை உறுதி செய்யுமாறும் பணித்தது. அத்துடன் அந்த அறிக்கையை அடுத்து நடக்க இருக்கும் விசாரணையின் போது சமர்பிக்கும்படியும் கட்டளை இடப்பட்டது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும்…
சிறை வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது…