றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின் போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நீதவான், மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் குறித்த இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடின் கொலை குறித்து நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படக்கூடிய அறிக்கைகளைக் கூட தமக்கு அனுப்பி வைக்குமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிடுவார்.
தாஜூடின் மரணச் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை வாகன விபத்து என்ற அடிப்படையில் பூர்த்தி செய்து விசாரணைக் கோவையை மூடி விடுமாறு அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
134/12 என்ற இலக்கமுடைய வாகன விபத்து குறித்த விசாரணைக் கோவையை தாம் இப்போதே பார்ப்பதாக அனுர சேனாநாயக்க வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது என தர்மவர்தன விசாரணைகளில் கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.