தாஜுதீன் கொலை விவகாரம் – நாரஹேன்பிட்டி பொலிஸ் அதிகாரிக்கு பிணை மறுப்பு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடின் கொலை வழக்கில் சந்கேத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் முன்னாள் அதிகாரியான, சுமித் பெரேராவிற்கு இன்றும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணி முன்மொழிந்த பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை பிணையில் அனுப்பினால் சாட்சிகளை அழிக்கக் கூடும் என அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அதற்கு செவிசாய்த்த கொழும்பு பிரதான நீதவான் நிஸாந்த பீரிஸ், சந்தேக நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.